
தமிழ் சினிமாவில் ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இதைத் தவிர்த்து 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.
இந்த சூழலில் சமீபகாலமாக தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாக ஊடகங்களின் பேட்டியின் மூலம் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் 22 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று நள்ளிரவு 1:45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திரைத் துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் ஊட்டச்சத்து நிபுணருமான கிருத்திகா தரன் ஷிஹான் ஹுசைனி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதவில், “அஞ்சலிகளும், நன்றிகளும். அதிக நாட்களாக நமக்கு ஷீஹான் ஹுசைனி தெரியும் .இன்னும் பல உயரங்களை அடைந்திருக்க வேண்டியவர். அவரின் கோரிக்கையை எனக்கு அவரை சார்ந்த நட்புகள் அனுப்பி வைத்தனர். உடனே எனக்கு தெரிந்த நண்பர் இரா.குமாரிடம் சொன்னேன். அவர் உடனடியாக துணை முதல்வர் அலுவலகத்தை தொடர்புக்கொண்டார். ஷீஹான் அவருக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை அனுப்பினேன். அதை பார்க்க சொல்லி அவரின் டீம் நட்பிடம் தெரிவித்தேன். பட் நிலைமை மோசம்தான் அப்போவே.
உடனடியாக துணை முதல்வர் அவரை சந்திக்க அதிகாரியை அனுப்பி அவரின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்டார் .எனக்கும் செய்தியை அனுப்பினார் நண்பர். ஆயிரம் மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். அதே சமயம் நம் துணை முதல்வரின் அதி வேக நடவடிக்கை மனதுக்குள் நன்றியை வர வைத்தது. அதன் பின் ஷீஹான் அவர்கள் ஏன் ரத்த சிலை செய்தேன் என சொல்லி விளையாட்டு அமைச்சருக்கு நன்றி சொல்லி விடியோ போட்டார். அதுவே கடைசி செய்தியாக அமைந்தது ஆயிரம் பேசலாம் அவரின் பெருமைகளை. பலர் அரசின் இந்த செயலை உச்ச பட்ச நாகரிகம் என சொல்லி உதவி செய்வது தேவையற்றது எனவும் எழுதி இருந்தனர்.
என்னை போன்ற சாதரண ஆட்களுக்கு அரசு உடனடியாக காது கொடுத்து கேட்டு அதிகாரிகளிடம் ரிப்போர்ட் கேட்டது எல்லாம் மிகப்பெரிய விஷயம். அஞ்சலி செலுத்த இன்று ஆயிரமாயிரம் வரலாம். உயிரோடு இருக்கும் பொழுது என்ன செய்தோம்? ஆயிரம் நன்றிகள் துணை முதல்வர் உதயநிதிக்கு.
இந்த விஷயத்தை எடுத்து சென்ற நட்பிற்கும். தெரியும். இருப்பினும் மனிதாபிமானம் முக்கியம் என்றார். மனிதங்கள் வெல்லும். வீர அஞ்சலிகள் செய்தியை கவனத்துக்கு கொண்டு வந்த அவர் நட்புகளுக்கும் நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.