மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் டெல்லியில் 13 வது நாளாக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் போராட்டதிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தநிலையில், பா.ஜ.க கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்தும், விவசாயிகள் போராட்டம் குறித்தும் பேசுவதற்காக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளனர்.
இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத்பவார், குடியரசுத் தலைவரை சந்திக்கும் முன்பு எதிர்க்கட்சிகளோடு ஆலோசனை நடத்தி, ஒற்றுமையான நிலைப்பாட்டை எடுத்து குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுத்தொடர்பாக அவர், "நாளை வெவ்வேறு காட்சிகளைச் சேர்ந்த 5, 6 பேர் சேர்ந்து பேசி, ஒற்றுமையான நிலைப்பாட்டை எடுக்கவுள்ளோம். எங்களுக்கு நாளை மாலை, ஐந்து மணிக்கு, குடியரசுத் தலைவரை சந்திக்க, அப்பாய்ண்ட்மென்ட் உள்ளது. அப்போது எங்களின் ஒற்றுமையான நிலைப்பாட்டை அவரிடம் தெரிவிப்போம்" இவ்வாறு கூறினார்.