Published on 25/11/2024 | Edited on 25/11/2024

அந்தமான் அருகே மீன்பிடி படகில் சுமார் 5 டன் போதைப் பொருட்கள் கடத்திச் செல்ல முயற்சிகள் நடைபெற்றன. இதனை இந்தியக் கடலோர காவல் படையினர் முறியடித்து பறிமுதல் செய்தனர். இந்தியக் கடலோர காவல் படையினரால் சுமார் 5 டன் அளவிற்குப் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட படகில் இருந்த நபர்களை பிடித்து கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தமான் அருகே இந்தியக் கடலோர காவல் படையினர் 5 டன் அளவிற்கு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.