Skip to main content

மோடி ஆட்சிக்காலத்தில் 5.5 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி...

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

வங்கிகளில் நிலுவையில் உள்ள வாராக்கடன்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கே தலைவலியாக உள்ள நிலையில் மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 5.5 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

5.5 lakh crore bad debt closed by bjp government

 

கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் ரத்து செய்துள்ள நிலையில் அவற்றில் 80 சதவீத வாராக்கடன்கள் கடந்த 5 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 2016 - 17-ம் நிதியாண்டில் 1 லட்சத்து 08 ஆயிரத்து 374 கோடி ரூபாயும், 2017-18-ம் நிதியாண்டில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 328 கோடி ரூபாயும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2018-19-ஆம் ஆண்டின் தொடக்க 6 மாத காலத்தில் வங்கிகள் 82,799 கோடி வாராக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 5,55,603 கோடி வாராக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 

y"> 

சார்ந்த செய்திகள்