![om prakash chautala](http://image.nakkheeran.in/cdn/farfuture/LDQGmCR5zvVJZ_RyGUvQ2NDiGgGrpTjS6SesCDAyvdg/1652246317/sites/default/files/inline-images/8_63.jpg)
ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா தன்னுடைய 84 வயதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஓம் பிரகாஷ் சௌதாலா 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில், 10ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் தோல்வியடைந்தார். இதையடுத்து, அவரது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவை ஹரியானா மாநில தேர்வு வாரியம் நிறுத்தி வைத்தது. பின்னர், 10ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதிய ஓம் பிரகாஷ் சௌதாலா, அதில் தேர்ச்சி பெற்று, 12ஆம் வகுப்பு தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், ஓம் பிரகாஷ் சௌதாலா தன்னுடைய மதிப்பெண் சான்றிதழை மாநில தேர்வு வாரிய அதிகாரிகளிடமிருந்து நேற்று பெற்றுக்கொண்டார். 84 வயதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.