கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி திரிபுராவிலும் பிப்ரவரி 27ஆம் தேதி நாகலாந்து மற்றும் மேகாலயாவில் வாக்குப் பதிவு நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களான இந்த மூன்றிலும், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திரிபுராவில் மொத்தமுள்ள 59 தொகுதிகளில் தற்போது வரை பாஜக 32 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 13 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 8 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இதன் மூலம் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது பாஜக.
மேகாலயாவில் உள்ள 58 தொகுதிகளில் பாஜக 9 தொகுதிகளிலும், நாகா மக்கள் முன்னணி 24 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 15 தொகுதிகளிலும் வென்றுள்ளனர். மேகாலயாவில் 59 தொகுதிகளில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் தேசிய மக்கள் கட்சி 19 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இங்கு, காங்கிரஸ் அதிக தொகுதிகளை வென்றுள்ள தனி கட்சியாக இருக்கிறது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.