Published on 19/09/2018 | Edited on 19/09/2018
மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது அதற்கு அவசரச்சட்டம் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவையில், முத்தலாக் தடை சட்டத்திற்கு அவசரச்சட்டம் கொண்டுவர ஒப்புதல். முத்தலாக் தடை சட்டத்தில் போதிய திருத்தங்கள் செய்து அவசரச்சட்டமாக வெளியிட ஒப்புதல்.
திருத்தங்கள்...
முத்தலாக் வழங்கியபின் கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம்.
முத்தலாக்கில் கணவன், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க திருத்தம்.
முத்தலாக் தடை சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம் என திருத்தம்.