மும்பையிலிருந்து டெல்லிக்கு விஸ்தாரா என்ற தனியார் நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது.
இதில் 153 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட மோசமான வானிலையால் விமானத்தை லக்னோவில் தரையிறக்குமாறு கூறினார். அப்போது பேசிய விமானி வெறும் 10 நிமிடங்களுக்கு மட்டுமே எரிபொருள் இருக்கிறது. அதனால் உடனடியாக விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து விமானத்தை லக்னோவில் தரையிறக்க அனுமதியளிக்கப்பட்டது, விமானமும் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து விஸ்தாரா நிறுவனம், போதுமான எரிபொருள் அதில் நிரப்பப்பட்டிருந்தது, முதலில் டெல்லியில் மோசமான வானிலை நிலவுவதாக கூறி லக்னோவில் தரையிறக்க அனுமதியளிக்கப்பட்டது, பிறகு லக்னோவிலும் வானிலை சரியாக இல்லை எனக்கூறி கான்பூர் அல்லது பிரக்யாராஜ்ஜில் தரையிறக்குமாறு கூறினார். பிறகு லக்னோவில் வானிலை தெளிவாகிவிட்டது எனக்கூறி அங்கு தரையிறக்குமாறு கூறினார். இந்த மாற்றங்களே விமானத்தில் எரிபொருள் குறைந்ததற்கு காரணம். விமான போக்குவரத்து விதிகளின்படி, கூடுதலான எரிபொருள் நிரப்பட்டு இருந்தது எனக்கூறியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.