Skip to main content

எம்.எல்.ஏ. நாக்கை அறுப்பவருக்கு ரூ. 10 லட்சம் பரிசு; காங்கிரஸ் நிர்வாகியால் அதிர்ச்சி அறிவிப்பு!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

MLA Tongue Cutter Rs. 10 lakh as a prize, Congress executive said

 

இந்து மதத்தையும், புனித நூலையும் அவமதித்த சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாக்கை அறுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத்தில்  காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைகள் துறையின் மாவட்டத் தலைவர் பண்டிட் கங்கா ராம் சர்மா,  சமாஜ்வாதி கட்சித் தலைவர் இந்து மதத்தை அவமதித்து வருவதாகவும், இந்து மத புத்தகமான ராம்சரித்மனாஸை அவதூறாக பேசியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

 

சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் சுவாமி பிரசாத் மெளரியா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் ஒரு  பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் “ பிராமணியத்தின் வேர்கள் மிகவும் ஆழமானவை. அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் பிராமணியம் தான் காரணம். இந்து என்பது ஒரு மதமே இல்லை. இந்து மதம் என்பது வெறும் புரளி தான். இந்த நாட்டில் உள்ள தலித்கள், பழங்குடியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை சிக்க வைக்கும் சதி தான் பிராமணியம். அந்த பிராமண மதத்தை இந்து மதம் என்று முத்திரை குத்தி வைத்துள்ளது. இந்து மதம் இருந்திருந்தால் பழங்குடியினர் மதிக்கப்பட்டிருப்பார்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் மதிக்கப்பட்டியிருப்பார்கள். ஆனால், என்ன ஒரு கேலிக்கூத்து” என்று எழுதி ஒரு வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

 

இந்த நிலையில்  மொராதாபாத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைகள் துறையின் மாவட்டத் தலைவராக பண்டிட் கங்கா ராம் சர்மா, சுவாமி பிரசாத் மெளரியா கூறிய கருத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,   “ சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினரான சுவாமி பிரசாத் மெளரியா இந்து மத புத்தகமான ராம்சரித்மானஸை மட்டுமல்ல, இந்து மதத்தையும் அவமதித்து வருகிறார். அவருடைய நாக்கை அறுப்பவர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.