Skip to main content

உணவை இந்து மதத்தவர் எடுத்துவரவில்லை என ஆர்டரை கேன்சல் செய்த நபர்... பதிலடி கொடுத்த சோமாட்டோ...

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

தனக்கு உணவு கொண்டு வந்தவர் இந்து மதத்தை சேர்ந்தவர் இல்லை என கூறி வாடிக்கையாளர் ஒருவர் தான் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்துள்ள சம்பவம் மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

 

man cancelled his food order in zomato because of a non hindu person delivering that food

 

 

ஆனால் அவர் உணவை கேன்சல் செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அதற்கு சோமாட்டோ நிறுவனம் அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த அமித் சுக்லா என்ற நபர் நேற்று இரவு சோமாட்டோ செயலி மூலம் அருகிலுள்ள உணவகத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவரது உணவு தயாரிக்கப்பட்டு, டெலிவரிக்காக ஒரு நபரிடம் தரப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் ஒரு இந்து இல்லை என கூறி தனது ஆர்டரை வேறு டெலிவரி பாய் மூலம் அனுப்ப கோரியுள்ளார். ஆனால் அவ்வாறு மாற்ற முடியாது என சோமாட்டோ நிறுவனம் கூறிய நிலையில் தனது ஆர்டரை கேன்சல் செய்து, அதற்கான தொகையான 237 ரூபாயையும் செலுத்தியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கிண்டல் செய்தும் வந்த நிலையில், அவரின் இந்த பதிவிற்கு சோமாட்டோ நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்நிறுவனத்தின் பதிலில், "உணவிற்கு மதம் கிடையாது, உணவு என்பதே ஒரு தனி மதம் தான்" என கூறியுள்ளது. சோமாட்டோ நிறுவனத்தின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

man cancelled his food order in zomato because of a non hindu person delivering that food

 

 

 

சார்ந்த செய்திகள்