Published on 20/10/2018 | Edited on 20/10/2018

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அருகே ஜோடா பதக்கில் தசரா பண்டிகை நடைபெற்று கொண்டிருக்கும்போது, அந்த விழாவை பார்க்க வந்த பார்வையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகி பலியாகினர். இச்சம்பவத்தை நேரில் பார்த்த பாஜக செய்தி தொடர்பாளர் ராஜேஷ் ஹனி கூறியதாவது: இந்த தசரா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது காங்கிரஸ்தான். நவ்ஜோதித் சிங் சித்துவின் மனைவிதான் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இருந்தார். இந்த நிகழ்ச்சி பெர்மிசன் வாங்காமல் நடத்தப்பட்டது. ரயில் விபத்து நடந்தபோது கூட சித்துவின் மனைவி மேடையில் பேசிக்கொண்டிருந்தார் என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை பதிவிட்டுள்ளார்.