Published on 21/11/2022 | Edited on 21/11/2022
![Mallikarjuna Karke consultation with Tamil Nadu Congress leaders!](http://image.nakkheeran.in/cdn/farfuture/NpuIWF4XhnmVHUY7cDePwYDMAzzyl2hHFJTDjrJgUZI/1668999566/sites/default/files/inline-images/mali43%20%281%29.jpg)
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினர்.
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு மாநிலங்களின் நிர்வாகிகளோடு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோரோடு அவர் ஆலோசித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.