Skip to main content

'டெல்லி யாருக்கு?'-வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

Published on 05/02/2025 | Edited on 05/02/2025

 

'Delhi for whom?'-Post-election polls reveal

70 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் இன்று (05.02.2025)  ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகான கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி 'REPUBLIC TV' கருத்துக்கணிப்பில் டெல்லியில் பாஜக 35-40, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-1 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

'TIMES NOW' வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் டெல்லியில் பாஜக 37-43, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-2 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
'P MARQ' வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் டெல்லியில் பாஜக 39-49 ஆம் ஆத்மி 21-31, காங்கிரஸ் 0-1 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

'MATRIZE' வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் டெல்லியில் பாஜக 35-40, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-1 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.  

'JVC' வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் டெல்லியில் பாஜக 39-45, ஆம் ஆத்மி 22-31, காங்கிரஸ் 0-2 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.  

'PEOPLES PULSE' வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் டெல்லியில் பாஜக 51-60, ஆம் ஆத்மி 10-19, காங்கிரஸ் 0 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

'HINDUSTAN TIMES' வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் டெல்லியில் பாஜக 51-60, ஆம் ஆத்மி 10-19, காங்கிரஸ் 0 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

'NDTV' வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் டெல்லியில் பாஜக 51-60, ஆம் ஆத்மி 10-19, காங்கிரஸ் 0 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

'CNN' வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் டெல்லியில் பாஜக-40,  ஆம் ஆத்மி-30 , காங்கிரஸ்-0 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்