Skip to main content

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் - மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை

Published on 06/12/2017 | Edited on 06/12/2017
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் - மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக ஒன்பது நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.



சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடந்த வாரம் 6 பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், ஒன்பது வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பதவி வகிக்கும் சுப்பிரமணியம் பிரசாத் மற்றும் வழக்கறிஞர்கள் ஆஷா, செந்தில்குமார், இளந்தெறியன், எமிலியாஸ், புகழேந்தி, சரவணன், ஆனந்த் வெங்கடேஷ், நிர்மல் குமார், ராமசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 

ஒரு மாதத்தில் இவர்களின் பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிநியமனம் ஏற்பட்டால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 69 ஆக உயரும். காலியிடங்கள் 6 ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்