உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டின் போது அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி, இந்தச் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான அசோக் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசோக் குமாருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், 55 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், அபராதத் தொகையை திருப்பி செலுத்தாவிட்டால், கூடுதலாக 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறி தீர்ப்பளிக்கப்பட்டது.