Published on 14/08/2022 | Edited on 14/08/2022
பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விலை பொதுப்பங்கு வெளியீட்டிற்கு பிறகு சுமார் 28% சரிந்துள்ளது.
கடந்த மே மாதத்தில் எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கு வெளியீட்டிற்கு வந்தபோது, ஒரு பங்கின் விலை 949 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகான நாட்களில், பங்கு விலை சரிந்து வந்த நிலையில், தற்போது பங்குச்சந்தைகளில் 648 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எல்.ஐ.சி. நிறுவனம், 603 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபத்தைவிட 24% அதிகம். இந்நிலையில், எல்.ஐ.சி. பங்கு விலை சரிவில் இருந்து மீள வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.