Skip to main content

தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது....

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
krs dam

 

 

 

கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 1.2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது. தற்போது அது 75,000 கன அடியாக திறக்கப்படுகிறது. 

 

கிருஷ்ணராஜ  சாகர் அணையில் இருந்து 40,000 கன அடியாக நீர் திறக்கப்படும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கபிணி அணையில் வினாடிக்கு 35,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு

Published on 03/09/2023 | Edited on 03/09/2023

 

nn

 

தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகத்திற்கு நீர் வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.

 

அதேநேரம் கர்நாடகாவில் நீர் திறப்புக்கு எதிராக முன்னாள் முதல்வர்கள் பொம்மை, குமாரசாமி ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 7,435 கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து நீர் திறப்பு 8,212 கனஅடிகளிலிருந்து 7,435 கன அடியாக குறைந்துள்ளது. கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1,000 கன அடியாக உள்ளது. இதன் காரணமாக தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து பத்தாயிரம் கன அடியில் இருந்து 9 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

 

கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து இருந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை வித்து இருந்த நிலையில் இந்த தடை உத்தரவு இன்றும் அமலில் இருக்கிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 5,018  கனடியில் இருந்து 6,430 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 48.48 அடியில் இருந்து 48.24 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 16.72 டிஎம்சியாக உள்ளது. வினாடிக்கு எட்டாயிரம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

 

 

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Increase in water release in Mettur Dam

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகக் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாகக் கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் கபினி அணையிலிருந்தும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

இதனால் கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கபினி அணையிலிருந்து 15,000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2,688 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திறந்து விடப்பட்ட நீரானது நேற்று ஒகேனக்கல் வந்தடைந்தது. தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை 2,000 கன அடியாக இருந்த நீர் வரத்து மாலையில்  5,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5,000 கன அடியாக உள்ளது. காவிரி நீர் தமிழக எல்லையைக் கடந்துள்ளதால் பிலிகுண்டுலுவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 177 கன அடியாக உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து நீர் திறப்பின் அளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.