Skip to main content

பாலியல் குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் - ஜெயா பச்சன்!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

தெலுங்கானா பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதுதொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் எழுந்துள்ளது. மேலும் சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன், இது போன்ற குற்றம் புரிந்தவர்கள் வெளிநாட்டில், பொதுவெளியில் நிற்கவைத்து அடித்தும், தூக்கிலிடப்பட்டும் கொல்லப்படுவது போல் கொல்லப்படவேண்டும் என்று ஆவேசமாக குறிப்பிட்டிருந்தார்.



இவற்றையெல்லாம் கேட்ட மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்த குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் போதிய அளவில் உள்ளதாகவும், ஆகவே புதிய சட்டங்களை உருவாக்குவதை விட, இருக்கும் சட்டங்களை துணிந்து செயல்படுத்தவும் அதற்கான நிர்வாகத் திறன்களைக் கொண்டு சமூகத்தில் மனமாற்றம் ஏற்பட வழிவகை செய்வதுமே இந்த குற்றக் கொடுமைகளைத் தடுப்பதற்கு போதுமானது என்றும் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்