Published on 22/07/2018 | Edited on 24/07/2018
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியாகாந்தி, மன்மோகன் சிங், குலாம்நபி அசாத், ராகுல்காந்தி, ப.சிதம்பரம் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
![congress](http://image.nakkheeran.in/cdn/farfuture/KDfWAvvkSxp_1B6DKP2_t6tC9FMznuWtNnGjgfJfPPA/1533347634/sites/default/files/inline-images/TRGG.jpg)
இந்தக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி இந்த செயற்குழு கூட்டத்திலுருந்து மோடி அரசிற்கு எதிரான கவுண்டவுன் தொடங்கிவிட்டது என தெரிவித்தார். அதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் வெறும் சுயதம்பட்டம் அடித்துகொள்வதாலும், பொய் வாக்குறுதிகளை கொடுப்பதாலும் எதையும் சாதிக்க முடியாது என மோடி அரசை சாடினார்.
மேலும் இன்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டது.