மத்தியப்பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் சேகோர் மாவட்டத்தில் முங்காவல்லி என்னும் கிராமத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 1/2 வயது சிறுமி ஷிஷ்ட்ரி அருகிலிருந்த 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தொடர்ந்து தேசிய மீட்பு படையினர், மாநில காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் குழந்தையை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
சிறுமி இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் வாயுவானது தொடர்ந்து செலுத்தப்பட்டது. முதலில் 30 அடி ஆழத்தில் இருந்த சிறுமி நேற்று மாலையில் 50 அடிக்கு மேல் சென்று விட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிறுமி தற்போது மயக்க நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.