Published on 22/03/2019 | Edited on 22/03/2019
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஹஜின் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். 3 மணி நேரத்தை கடந்த இரவு வரை நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் போது பயங்கரவாதிகள் பொதுமக்களை பிணயமாக பிடித்து வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது பயங்கரவாதிகள் பிடியில் இருந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இமாம்சாகிப் பகுதியில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.