உயர்சாதியினர் இதுவரை பொதுப்பிரிவில்தான் வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் இடம்பெற்று வந்தார்கள். சாதிவாரி இடஒதுக்கீடுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற போர்வையில் முற்பட்ட வகுப்பினருக்கு கூடுதலாக 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
ஜாதி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை காப்பாற்றும் நடைமுறை நாடு முழுக்க பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். ஆனால், உயர்ஜாதி பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று, நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்டோருக்கு இலக்கணம் என்ன தெரியுமா?
1.ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
2.விவசாய நிலம் 5 ஹெக்டேருக்கு குறைவாக இருக்க வேண்டும்.
3.1000 சதுர அடிக்குள் வீடு இருக்க வேண்டும்.
4.நகராட்சிகளுக்குள் 324 சதுர அடிக்குள் வீட்டு மனைக்கு குறைவாக இருக்க வேண்டும்.
5.அங்கீகாரம் பெறாத நகராட்சிக்குள் 624 சதுர அடிக்குக் குறைவாக வீட்டு மனை வைத்திருக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்கான வரைமுறையே கேலிக்குரியதாக இருக்கிறது. அதாவது, இவ்வளவு சொத்து வைத்திருப்பவர்கள், சொத்தே இல்லாத குடிசைவாசிகளின் இட ஒதுக்கீடை பறிக்க பாஜக அரசு முடிவெடுத்திருப்பது மிகப்பெரிய அநீதி என்று மக்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகும் என்று சமூகநீதி ஆதரவாளர்கள் எச்சரிக்கிறார்கள்.