Published on 24/09/2018 | Edited on 24/09/2018

நேற்று ட்விட்டரில், ”எங்கள் பிரதமர் திருடர்” என்று தேசிய அளவில் ட்ரெண்டானது, பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துறை செய்தது பிரதமர் மோடிதான் என்று ஃப்ரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்திருந்தார். இதனை அடுத்து நடந்த பத்திரிகையளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, ஃப்ரான்ஸ் முன்னாள் அதிபர் மோடிதான் பரிந்துறை செய்தார் என்று சொல்லியிருக்கிறார். அதில், பிரான்ஸ் முன்னாள் அதிபரின் பேச்சு மூலம் மோடி ஒரு திருடர் என்று தெரிகிறது. மோடிய திருடர் என்று ப்ரனாஸ் முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார் என்று ராகுல் காந்தி கூறினார்.
இந்நிலையில், இதனை தொடர்ந்து ட்விட்டரில், ”எங்கள் பிரதமர் திருடர்” என்று ஹிந்தியில் ’மேரா பிஎம் சோர் ஹேய்’ என ஹேஸ்டேக் தேசியளவில் ட்ரெண்டானது .