![incident happened of the girl returning home after school in uttar pradesh](http://image.nakkheeran.in/cdn/farfuture/fJzsSb4_fl9UdMCbY9jrrsPuGazFirdGaUGijJjbRrs/1726322387/sites/default/files/inline-images/rapeni_10.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் பள்ளி முடிந்து தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல், அந்த சிறுமியை வலுகட்டாயமாக இழுத்து அருகில் உள்ள புதர் பகுதிக்கு கொண்டு சென்று சிறுமியின் கைகளையும், வாயையும் கட்டிவிட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். 3 பேரையும் எதிர்த்து சிறுமி போராடி வந்த நிலையில், கோபமடைந்த அவர்கள், சிறுமியை அடித்து அருகில் உள்ள கால்வாயில் வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, பாலியல் தொல்லைக்கு ஆளாகி காயமடைந்த அந்த சிறுமியை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் இச்சம்பவச்ம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.