அண்மையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் நடத்தலாமா என்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்திற்குப் பிறகு, பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடிங் (Coding) என்ற பாடப்பிரிவு கூடுதலாக சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல் 9 முதல் பத்தாம் வகுப்புவரை டேட்டா சயின்ஸ் (Data Sicence ) என்ற பாடப்பிரிவு கூடுதலாக சேர்க்க உள்ளதாகவும் கல்வி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் புதிய பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.