அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்ல அனுமதி அளித்தது உச்சநீதி மன்றம். இதனை ஒருசாரார் ஏற்றனர், மற்றொரு சாரார் முற்றிலுமாக எதிர்த்தனர். பல அமைப்புகள் இந்த தீர்ப்பிற்கு எதிராக பேரணிகளும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இருந்தாலும் வருகின்ற 17ஆம் தேதி நடை திறக்கும்போது பெண்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் வருகின்ற 17 அன்று ஐப்பசி மாத பூஜையிலேயே கலந்துகொள்வார்கள் என்று பல வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து நேற்று சபரிமலை தீர்ப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டன் ஒன்றில் பேசிய கொள்ளம் துளசி, ”சபரிமலைக்குள் நுழையும் பெண்களை இரண்டாக கிழித்துவிட வேண்டும்” என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். மேலும் அதில், கிழித்த பெண்ணின் உடல் ஒரு பாதியை கேரள தலைமை அலுவலகத்துக்கும், மற்றொரு பாதி டில்லி பிரதமர் அலுவலகத்துக்கும் பார்சல் செய்துவிட வேண்டும்” என்றார்.
இந்நிலையில், கேரள காவல்துறை நடிகர் கொள்ளம் துளசியின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையடுத்து பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள கொள்ளம் துளசி, நான் ஐயப்பனின் மீது வைத்திருந்த ஆழ்ந்த பக்தியில் அவ்வாறு பேசிவிட்டேன். பின்னர்தான் ஒரு பிரபலமானவனாக யோசித்தேன் அவ்வாறு பேசியிருக்க கூடாது என்பதை உணர்ந்தேன். நான் இதற்கு முழுமனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.