Skip to main content

"மக்கள் ஆசி இருந்தால் மீண்டும் முதலமைச்சராவேன்"- சித்தராமைய்யா 

Published on 25/08/2018 | Edited on 25/08/2018
sidaramaiah

 

கர்நாடகா, ஹசன் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, தான் மீண்டும் முதலமைச்சராவதை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  தடுப்பதாக கூறியுள்ளார்.

 

முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் வெற்றிபெற்றும் முதலமைச்சர் ஆகாமல் போனது துரதிர்ஷ்ட வசம் என்று கூறியவர், பின் மக்களின் ஆசி இருந்தால் தான் மீண்டும் முதலமைச்சராவேன் என்று சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

 

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமைந்திருக்கிறது. குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். என்னதான் கூட்டணியில் இந்த இரு கட்சியும் இருந்தாலும், பல மனஸ்தாபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல, தற்போது சித்தராமைய்யா இவ்வாறு பேசியிருப்பது அனைவரையும் மீண்டும் சந்தேகிக்க வைக்கிறது.            

  

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரைத் தட்டிக் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர்; கர்நாடகாவில் சுவாரஸ்யம்

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

sitharamaiya basavaraj bommai meets karnataka bellavi airport

 

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

 

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

அரசியல் கொள்கை ரீதியாக பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா ஆகிய இருவரும் தீவிரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பெலகாவி விமான நிலையத்தில்,  பசவராஜ் பொம்மையும் சித்தராமையாவும் ஒருவருக்கு ஒருவர் எதிரெதிரே நேரடியாக சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். மேலும் சித்தராமையா பசவராஜ் பொம்மையை தோளில் தட்டிக் கொடுத்தார். பிறகு இருவரும் ஒரு சில நொடிகள் பேசியபடி விமான நிலையத்தில் நடந்து சென்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

லிங்காயத் சமூகம் பற்றி சித்தராமையாவின் பேச்சும், விளக்கமும்

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

congress leader sitharamaiya talks about basavaraj bommai 

 

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சி அமைக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியுள்ளார்கள். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்தங்களைப் பெற முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நேரடியாக நாற்பது சதவீதம் கமிஷனை முதலமைச்சர் படத்துடன் கூடிய க்யூ ஆர் கோடுகளை அச்சிட்டு இதன் மூலம் கமிஷனை செலுத்துங்கள் என்று கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முன்னாள் முதலமைச்சர்  சித்தராமையாவிடம் செய்தியாளர் ஒருவர் பாஜகவில் லிங்காயத் சமூகத்தை சார்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பி இருந்தார்.  சித்தராமையா இது குறித்து பேசுகையில், "கர்நாடக மாநிலத்தில்  தற்போது லிங்காயத் சமூகத்தை சார்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக  உள்ளார். அந்த சமூகத்தை சார்ந்த முதலமைச்சர் தான் பல்வேறு ஊழல்களை செய்து கர்நாடகத்தின் பெயரை பாழாக்கிவிட்டார்" என தெரிவித்திருந்தார். இது குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில், "தன்னை மட்டும் ஊழல் வாதி என்று கூறி இழிவுபடுத்தாமல் தான் சார்ந்துள்ள சமூகத்தையே ஊழல் சமூகமாக விமர்சிப்பதாக  சித்தராமையா மீது குற்றம் சாட்டி உள்ளார்.

 

congress leader sitharamaiya talks about basavaraj bommai 

 

இந்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதலமைச்சர்  சித்தராமையா பதிலளித்துப் பேசுகையில், "லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தலைவர்களான வீரேந்திர பாட்டீல், நிஜலிங்கப்பா போன்றோர் முதல்வர்களாக இருந்துள்ளனர். அவர்கள் நல்ல முறையில் ஆட்சி செய்தனர். நான் தற்போதுள்ள முதலமைச்சரின் ஊழல்களை மட்டுமே பேசி வருகிறேன். நான் எங்கும் அவர் சார்ந்த லிங்காயத் சமூகம் பற்றி பேசவில்லை. இந்த விவகாரத்தை பாஜகவினர் திரித்து கூறி வருகின்றனர். இதன் மூலம் பாஜகவினர் தேர்தலில் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். எனக்கு லிங்காயத் சமூகத்தின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. பசவராஜ் பொம்மை மட்டுமே ஊழல்வாதியாக திகழ்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.