Skip to main content

'மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து?'-அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நீக்கம்

Published on 07/03/2025 | Edited on 07/03/2025
'Sign in support of the three-language policy' - AIADMK former MLA removed

அதிமுகவில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் கொண்டு நீக்கி வைக்கப்படுகிறார். கழகத்தின் உடன் பிறப்புகள் யாரும் இவருடன் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து வாங்க பாஜக திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் கையெழுத்து பெறவும் பாஜக  ஏற்பாடு செய்துள்ளது. நேற்று அதிமுக முன்னாள் எம்எல்ஏவான விஜயகுமார் பாஜகவினரின் கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், 'நான் இருமொழி கொள்கை தான் என்று சொன்னேன். பாஜகவினர் வற்புறுத்தி கையெழுத்து வாங்கினர். நான் நீக்கப்பட்டது குறித்து எங்கள் பொதுச்செயலாளரைச் சந்தித்த பேசுவேன்' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்