2020-ம் ஆண்டு மத்தியில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் தயார் நிலையில் இருக்குமென இந்திய தொலைத்தொடர்பு துறை செயலர் அருணா சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
டிராய் கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி அன்று 5ஜி சேவைக்குத் தேவையான அலைக்கற்றைகள் உட்பட 8,644 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விடுவதற்குப் பரிந்துரை செய்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4.9 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தேசிய டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் பாலிசி நடைமுறைப் படுத்தல் குறித்து நடந்த கூட்டத்தில் பங்குபெற்ற இந்தியாவின் தொலைத்தொடர்பு துறை செயலர் அருணா சுந்தர்ராஜன், வரும் 2019-ம் ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் 5ஜி சேவை தொழில்நுட்பத்திற்கான கட்டமைப்புத் தயாராக இருக்கும். மேலும் 5ஜி சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விடுவதற்கான நடைமுறைகளும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என்றார்.
ஏலம் உடனடியாக நடத்தப்படுமா என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாது என்றும் ஆனால், 2020-ம் ஆண்டு மத்தியில் 5ஜி சேவை தொழில்நுட்பம் தயார் நிலையில் இருக்கும் என்பதையும் தெரிவித்தார்.