
கடந்த 4 ஆம் தேதி பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியான நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் பாடகி கல்பனா நடந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ''என்னைப் பற்றியும் என் கணவரை பற்றியும் செய்திகளில் தவறான வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றிய விளக்கம் கொடுப்பதற்காகத்தான் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன். இந்த வயதில் பிஹெச்டி, எல்.எல்.பி இன்னும் நிறைய விஷயங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். இசைத் துறையின் மீதும் அதீத கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். இதில் ரொம்ப ஸ்ட்ரெஸ் லெவல் அதிகமாகி பல வருடமாகவே சரியான தூக்கம் இல்லை. தூங்க முடியாத பிரச்சனை காரணமாக மருத்துவரிடம் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்ட பொழுது இன்சோம்னியா பிரச்சனை இருக்கிறது என மருந்துகள் கொடுத்திருந்தார்கள்.
சம்பந்தப்பட்ட நாளில் அந்த மருந்தின் டோஸ் அதிகமாக எடுத்துக் கொண்டதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இன்று நான் உயிரோடு திரும்பி வந்து உங்களிடம் பேசுவதற்கு காரணம் அன்று என் கணவர் எனக்காக பட்டப்பாடு தான். என்னைக் காப்பாற்றுவதற்காக அவர் பட்ட கஷ்டம். வெளியூரில் இருந்த அவர் சரியான நேரத்தில் என்னைக் காப்பாற்றுவதற்காக போலீசார், மீடியா, ஆம்புலன்ஸ் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து சரியான சமயத்தில் வந்து என்னை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அதனால் நான் உயிர் தப்பித்தேன். எனவே எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். எனக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் கிடையாது. என் வாழ்க்கையிலே கிடைத்த மிகவும் அருமையான விஷயம் பிரசாத் பிரபாகர் எனக்கு கணவனாக கிடைத்தது. அது மாத்திரம் இல்லாமல் இவ்வளவு அழகான, மிகவும் அன்பான தயா பிரசாத் என் மகளாக கிடைத்தது. எனவே தவறான வதந்திகளை நம்பாதீர்கள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த தருணத்தில் காவல்துறைக்கும் மீடியாவிற்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நான் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்த எத்தனையோ உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி'' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.