Skip to main content

ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவர்!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

மும்பையைச் சேர்ந்த சாகர் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் ராணி என்ற பெண்ணோடு தொடர்பு வைத்துள்ளார். இவர்களின் பழக்கத்தால் ராணி கர்ப்பமாகியுள்ளார். அதனால் வேறு வழியின்றி ராணியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் சாகர். சாகரின் இரண்டாவது திருமணத்தால் அவரது முதல் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான சாகர் ராணியிடம் தற்போது இந்த குழந்தை வேண்டாம் என்று அதனைக் கருக்கலைப்பு செய்ய சொல்லியுள்ளார். அதற்கு ராணி மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்துள்ளது.



ரயிலில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது இது சம்மந்தமாக சண்டையிட்டுள்ளனர். அப்போது சாகர் ராணியை வேகமாகத் தாக்கி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். ரயில் மிகவும் சென்றதால் ராணி சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இதுபற்றி ராணி போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்