Skip to main content

ஆலை மூடலால் நாடெங்கும் ஊசி, சிரிஞ்சுகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

Hindustan Syringes and Medical Devices Ltd POLLUTION ISSUES


இந்தியாவின் மிகப்பெரிய சிரிஞ்சு (Syringes) மற்றும் ஊசி தயாரிக்கும் நிறுவனத்தின் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், அவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

 

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் ஹிந்துஸ்தான் சிரிஞ்சஸ் அண்ட் மெடிக்கல் டிவைஸ் (Hindustan Syringes and Medical Devices Ltd- 'HMD').என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் மொத்த ஊசி மற்றும் சிரிஞ்சு சேவையில் மூன்றில் இரண்டு பங்கைப் பூர்த்தி செய்கிறது. இது உலகின் மிகப்பெரிய சிரிஞ்சு உற்பத்தி நிறுவனமாகவும் திகழ்கிறது. 

 

இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் ஃபரிதாபத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் நான்கு ஆலைகளில் மூன்று மூடப்பட்டுள்ளன. ஆலைகள் மூடலால் தினசரி ஒன்றரைக் கோடி ஊசிகள் மற்றும் 80 லட்சம் சிரிஞ்சுகள் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படும் என்றும், தற்போது தங்கள் கைவசம் உள்ள ஊசிகள் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 

 

இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்