Skip to main content

அடுத்தடுத்து அதிர்ச்சி; திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட்!

Published on 24/09/2024 | Edited on 24/09/2024
Gutka packet inside tirupati laddu

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில், லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார்.

திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், திருப்பதி லட்டுவில் போதைப்பொருளான குட்கா பாக்கெட் இருந்ததாக பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றைக் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொல்லக்கூடேம் பகுதியில் வசித்து வரும் பத்மா என்ற பெண் கடந்த 19 ஆம் தேதி திருப்பதி சென்றிருக்கிறார். அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பதியில் லட்டு வாங்கியுள்ளார். 

இதையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்றையும் பாத்தியா வெளியிட்டு புகார் அளித்துள்ளார். லட்டில் மிருக கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சையே இன்னும் முடியாத நேரத்தில் தற்போது குட்கா பாக்கெட் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே திருப்பதி தேவஸ்தான குழு பாத்திமாவிடம் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதக தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்