Published on 06/02/2019 | Edited on 06/02/2019
கடந்த நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் 2017-18-ம் ஆண்டில் வேலையில்லாதோர் அளவு 2.2 சதவீத அளவுக்கு அதிகரித்ததாகவும் இது 1972-73-ம் ஆண்டில் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டத்தைவிட அதிகம் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தற்போது தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் கடன் உதவி வழங்கும் திட்டத்தின்படி கடன் வழங்கப்பட்டு 3 கோடி பேர் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். அதுபோல 7 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே மக்கள் போலியான குழப்பக்கூடிய அறிக்கைகளை நம்ப வேண்டாம்' என கூறியுள்ளார்.