குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜாஹிர். இவர் அங்குச் சொந்தமாகப் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு மட்டும் பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணியும் சட்டத்திலிருந்து போலீசார் விலக்கு அளித்துள்ளனர். அதற்கான காரணம் தான் சற்று விசித்தரமானது. ஜாஹிர் ஒருமுறை ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றபோது போலீசாரிடம் சிக்கினார். அவரை பிடித்த போலீசாரிடம் அவர் தனது தலை பெரியதாக இருப்பதால் எந்த ஹெல்மெட்டும் தன் தலைக்குள்ளேயே செல்ல வில்லை அதனால் என்னால் ஹெல்மெட் அணியவில்லை என சொன்னார்.
முதலில் அபராதத்திலிருந்து தப்பிய இப்படிச் சொல்வதாக நினைத்த போலீசார். அவர் பரிசோதனைக்குத் தயார் எனச் சொன்னதும் போலீசாரிடம் இருந்த வித விதமான பெரிய ஹெல்மெட்களை எல்லாம் போட்டுப் பார்த்தனர். அதில் எதுவும் அவர் தலைக்கு உள்ளேயே நுழையவில்லை. இதையடுத்து அவரது பிரச்சினையை புரிந்து கொண்ட போலீசார் அவருக்கான ஹெல்மெட் மார்கெட்டில் கிடைக்கும் வரை அவருக்கு மட்டும் ஹெல்மெட் போடுவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவதாகக் கூறி அவருக்கு அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தனர்.