Skip to main content

அந்நிய செல்வாணி கையிருப்பு மதிப்பு 2 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!

Published on 20/03/2022 | Edited on 20/03/2022

 

Foreign exchange reserves fall in 2 years!

 

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சிக் கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கித் தெரிவித்துள்ளது. 

 

மார்ச் 11- ஆம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 9.64 பில்லியன் டாலர் அளவிற்கு சரிந்து, 622.27 பில்லியன் டாலராக இருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு மார்ச் 7- ஆம் தேதி இதுவரை இல்லாத அளவாக 77.02 ரூபாயாக வீழ்ச்சிக் கண்டது. இந்த நிலையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்த அதிக அளவு அமெரிக்க டாலர்களை விற்றதாக ரிசர்வ் வங்கித் தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்