Skip to main content

இ-சிகரெட்டுக்கு தடை: அவசர சட்டம் கொண்டுவரும் மத்திய அரசு...

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

புகையிலையில் கொண்ட சிகரெட்டுகளை மாற்றாக கொண்டுவரப்பட்ட இ-சிகரெட்டுகள் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதால், அதற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவ செய்துள்ளது.

 

e cigarettes banned in india

 

 

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், வரும்காலத்தில் இந்த இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வரைவு அவசரச் சட்டத்தில், இ சிகரெட் தடையை மீறுபவர்களுக்கு  அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்