இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக பதவியேற்றத்தை அவரது தாயார் ஹீராபென் மோடி தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்தார். குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று மாலை நடைப்பெற்ற பிரம்மாண்ட பதவி ஏற்பு விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நரேந்திர மோடிக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எம்பிக்களும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

பாஜகவின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர்கள் தொடர்ந்து கேபினட் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர் .இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தொலைக்காட்சி மூலம் கண்டு மகிழ்ந்ததுடன், தொலைக்காட்சியின் மூலம் விழாவை பார்த்தவாறே தனது மகனுக்கு ஆசிர்வாதம் செய்தார்.