கரோனா வைரஸ் இந்தியாவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும்நிலையில், தற்போது உம்பன் புயல் அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் உம்பன் புயல் இன்று மேற்கு வங்கத்தின் திகா - வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில், 160 முதல் 170 கி.மீ. வேகத்தில் வீசும் சூறைக்காற்றுடன் கரையை கடந்து வருகிறது. ஆம்பன் புயல் சுந்தரவனக் காடுகளை கடந்து மேற்கு வங்க உட்பகுதியில் மாலை 6 மணிக்கு வலுவிழக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உம்பன் புயல் எச்சரிக்கையால் மேற்கு வங்கத்தில் மேலும் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல் ஒடிஷாவில் 1,58,640 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் என்.டி.ஆர்.எஃப் தலைவர் பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் ஃபானி புயலின் போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.