இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவந்தது. மஹாராஷ்ட்ராவில் மட்டும் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மஹாராஷ்ட்ராவில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்துவந்தது. இந்நிலையில், தற்போது அங்கு டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் அதிக அளவு பரவத் தொடங்கியுள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் கரோனா 3ஆம் அலைக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், மஹாராஷ்ட்ராவில் இருந்து கர்நாடகா வருபவர்கள் அனைவரும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 72 மணி நேரத்திற்குள் அந்த சான்றிதழ் பெறபட்டிருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் கரோனா தடுப்பூசி போட்ட மருத்து சான்றிதழை உடன் வைத்திருக்க வேண்டும் அரசு அறிவுறுத்தியுள்ளது.