சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊடுருவியதால், கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில், இந்தியா, சீனா ராணுவத்தினருக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதலை தடுத்து அமைதியை நிலைநாட்ட இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தச் சூழலில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் திங்கள்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இரு நாட்டு உறவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக சீனா - இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருதரப்பும் பரஸ்பரம் நல்லுறவுடன் எல்லைப் பிரச்சினை அணுகலாம் என இந்த பேச்சுவார்த்தையில் கூறபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.