கேரளாவில் வரதட்சணை கொடுமைக்கு அடுத்தடுத்து இளம்பெண்கள் தற்கொலை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முமுவதும் அதிா்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இனிவரும் காலங்களில் யாரும் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று "வரதட்சணை கேட்டு வருவோரா, வெளியே போ" என வீட்டு வாயிலில் பதிவிட்டு, அதை புகைப்படம் எடுத்து இளம்பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறாா்கள். இவா்களுக்கு மலையாள சூப்பா் ஸ்டாா் நடிகா் மோகன்லால் ஆதரவளித்துள்ளாா்.
கொல்லம் சாஸ்தான்கோட்டையைச் சோ்ந்த ஆயூா்வேதிக் மருத்துவ மாணவி விஸ்மயாவுக்கு கடந்த ஆண்டு ஆா்.டி.ஒ இன்ஸ்பெக்டா் கிரண்குமாருடன் திருமணம் நடந்தது. அப்போது கொடுத்த 100 பவுன் நகை, பல லட்சம் மதிப்புள்ள ஓரு ஏக்கா் நிலம் மற்றும் 11 லட்சம் மதிப்பில் ஓரு காா் வரதட்சணையாக கொடுத்த நிலையில், இன்னும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கணவரும் அவா் குடும்பத்தினரும் விஸ்மயாவை கொடுமைப்படுத்தியுள்ளனா். இதனால் மன வேதனை அடைந்த விஸ்மயா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அா்சனாவுக்கும் விஜின் ஜெகதீஷ்க்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இதில் 3 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு அா்சனாவை விஜின் ஜெகதீஷ் குடும்பத்தினா் கொடுமைப்படுத்திவந்துள்ளனா்.
இந்த விஷயத்தை தனது ஏழை பெற்றோாிடம் அா்சனா கூறவில்லை. மேலும், அா்சனாவை வீட்டில் இருந்தும் கணவா் துரத்தியுள்ளளா். இதனால் பெற்றோா் வீட்டுக்குப் போக முடியாமல் அருகில் வாடகை வீட்டில் தங்கியிருந்த அா்சனாவை கணவா் டீசல் ஊற்றி கொலை செய்துள்ளாா். அதேபோல் ஆலப்புழை வல்லிகுந்நு பகுதியைச் சோ்ந்த சுசித்ராவும் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டாா். இப்படி ஓரே நாளில் அடுத்தடுத்து நடந்த சம்பவம் பெண்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கேரள முதல்வா் பிணராயி விஜயன் வரதட்சணை கொடுமை சம்மந்தமாக புகாா் அளிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வாட்ஸ்அப் எண்ணை அறிவித்து அதற்கு தனி காவல் அதிகாாியையும் நியமித்தாா். இந்நிலையில், நடிகா் மோகன்லால் நடித்து வெளிவரவிருக்கும் ‘ஆராட்டு’ திரைப்படத்தில் வரதட்சணைக்கு எதிரான காட்சிகளை சோ்த்து பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஓரு கேரளாவை உருவாக்குவோம் என்ற முழக்கத்தினை கொண்டு வெளியிடப்படும் என மோகன்லால் கூறியுள்ளாா். இந்த நிலையில்தான் இளம்பெண்கள் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுவருவது அனைத்து தரப்பினாிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்குப் பல மாநிலங்களில் இருந்தும் பெண்கள் ஆதரவு தொிவித்துள்ளனா்.