உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. இதனை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசி சோதனை பரிசீலனையில் இருந்து வருகின்றது. 20 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சோதனையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த விரைவில் தடுப்பூசி பயன்பாட்டிருக்கும் வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் இதுதொடர்பாக மக்களவையில் பேசினார். அதில்,
“இந்தியா சிறப்பாக செயல்பட்டதால் கரோனா பாதிப்பு 10 லட்சம் பேருக்கு 3,328 பேர் என்ற வீதத்திலும், இறப்பு எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 55 பேர் என்ற அளவில் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுமற்ற நாடுகளை ஒப்பிடுகையில் குறைவான எண்ணிக்கை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.