Published on 20/08/2022 | Edited on 20/08/2022

அமைச்சரான பிறகு முதல் முறையாக தென் அமெரிக்க நாடுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
வருகிற ஆகஸ்ட் 22- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 27- ஆம் தேதி வரை பிரேசில், பராகுவே, அர்ஜெண்டினா ஆகிய தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ள அவர், இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மூன்று நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க உள்ள அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், இரு தரப்பு கூட்டுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கிறார். தென் அமெரிக்க நாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமையவுள்ளது.