Published on 10/08/2022 | Edited on 10/08/2022

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கரோனா பரவல் தற்போது மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் அவரது தாயாருமான சோனியா காந்திக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பே கடந்த ஜூன் மாதம் பிரியங்கா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.