
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. உலகின் பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவில் இதுவரை 95 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் நேற்று ஒருநாளில் மட்டும் 32,981 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 94.45% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.45% ஆக உள்ளது. கரோனா பாதித்த 3.96 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.