Published on 24/08/2020 | Edited on 24/08/2020

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்ற ராகுல் காந்தி காங்கிரசின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து சோனியா காந்தி காங்கிரசின் தற்காலிக தலைவராக நீடித்து வந்தார். இந்நிலையில் இன்று காங்கிரஸின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்ற நிலையில் நேற்றே சோனியா காந்தி தனது தற்காலிக தலைவர் பதவியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் அப்பொழுதே இந்தத் தகவலானது பொய் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று 7 மணி நேரமாக நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தியே தற்காலிக தலைவராக நீடிப்பார் என்றும், இன்னும் 6 மாத காலத்தில் கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.