இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பைக்குகள், கார்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களின் விற்பனை 1.11 சதவிகிதம் குறைந்துள்ளது.
கடந்த 8 மாதங்களில், 7 முறை விற்பனை சரிவு கண்டுள்ளதாக வாகன உற்பத்தியாளர் சங்கமான சியாமின் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மட்டும் 2,72,284 பயணிகள் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இதுவே கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் 2,75,346 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 1.11% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
கார் இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விற்பனையும் பிப்ரவரியில் சரிந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விற்பனை 1,79,122 என இருந்துள்ளது. அதுவே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4.33% குறைந்து 1,71,372 ஆக உள்ளது.
அதேபோல், இருசக்கர வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு 16,86,180 என இருந்துள்ளது. அது இந்த வருடம் பிப்ரவரி மாதம் 4.22% குறைந்து 16,15,071-ஆக உள்ளது.