Published on 15/12/2021 | Edited on 15/12/2021
![The bus fell into the headwaters river](http://image.nakkheeran.in/cdn/farfuture/b6mHINN-CRYnSBr1xVJKt8VV2MVj3rABftT_F6eAwt4/1639555300/sites/default/files/inline-images/zzzzzzzzzz3232.jpg)
ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் ஏழூர் என்ற இடத்தில் ஆற்றுப்பாலத்தைக் கடக்கும்போது அரசு பேருந்து கவிழ்ந்து தலைகுப்புற ஆற்றில் விழுந்ததில் 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அந்தப் பேருந்தில் 26 பேர் பயணித்த நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக தேசிய மீட்பு படைக்குத் தகவல் அளிக்கப்பட்டு, தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றுவருகிறது. இந்த விபத்து ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.