வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுரா மாநிலத்திற்கு கடந்த 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், மீதமுள்ள மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளும், நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பாஜக போன்ற முக்கியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதேபோன்று திரிபுரா தேர்தலில் பதிவான வாக்குகளும் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.